Advertisement

SA vs IND: வரலாற்று சாதனை நிகழ்த்திய டி காக்!

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ள குயிண்டன் டி காக், ரிக்கி பாண்டிங், சங்கக்கரா, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Advertisement
Quinton de Kock surpasses Sachin Tendulkar, breaks Sehwag's world record to equal De Villiers' huge
Quinton de Kock surpasses Sachin Tendulkar, breaks Sehwag's world record to equal De Villiers' huge (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 23, 2022 • 07:50 PM

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் குவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 23, 2022 • 07:50 PM

ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இன்று நடைபெற்று வரும் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு 288 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Trending

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பான துவக்கத்தை பெறவில்லை என்றாலும் மிடில் ஆர்டரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தொடக்க வீரர்கள் மலன் ஒரு ரன்களிலும், பவுமா 8 ரன்களிலும், மார்க்கம் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்கு டி காக் மற்றும் வேண்டர் டுசென் ஆகியோர் 3 விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து 144 பார்ட்னர்ஷிப் ஜோடி காப்பாற்றியது. 70 ரங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 144 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து 214 ரன்கள் வரை எடுத்து சென்றனர்.

பின்னர் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்கள் குவித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய டி காக் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி எந்த ஒரு அணிக்கு எதிராகவும் குறைவான இன்னிங்ஸ்களில் 6 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய அணியை சேர்ந்த வீரேந்திர சேவாக் நியூசிலாந்து அணிக்கு எதிராக 23 இன்னிங்சில் 6 சதம் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை இன்று முறியடித்த டி காக் 16 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்கு எதிராக 6 சதம் அடித்து குறைந்த எண்ணிக்கையில் 6 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement