Advertisement

யார் சிறந்த விக்கெட் கீப்பர் - வரிசைப்படுத்திய அஸ்வின்!

தான் பந்துவீசிய வரையில் யார் ஸ்பின்னிற்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி - சஹா - தினேஷ் கார்த்திக் ஆகியோரை வரிசைப்படுத்தியும் உள்ளார்.

Advertisement
R Ashwin names best keeper in Dhoni, Karthik and Saha
R Ashwin names best keeper in Dhoni, Karthik and Saha (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 18, 2021 • 11:14 AM

இந்திய அணியின் நட்சத்திர பவுலர், சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின். 2011ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் அஷ்வின், 81 டெஸ்ட் போட்டிகளில் 427 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது இந்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால், கபில் தேவை பின்னுக்குத்தள்ளி 2ஆம் இடத்தை பிடித்துவிடுவார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 18, 2021 • 11:14 AM

டி20 அணியிலும் கம்பேக் கொடுத்துள்ள அஸ்வினை, விரைவில் ஒருநாள் போட்டியிலும் பார்க்கலாம். உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காகவும் நிறைய ஆடியுள்ளார். 136 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 661 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

Trending

தோனி, விருத்திமான் சஹா, தினேஷ் கார்த்திக் ஆகிய விக்கெட் கீப்பர்களை அஸ்வின் பார்த்துள்ள நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என கூறியுள்ளார். தோனிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக சஹா இருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். உள்நாட்டு போட்டிகளில் தினேஷ் கார்த்திக்குடன் அஸ்வின் ஆடியுள்ளார்.

இந்நிலையில், தோனி - சஹா - தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யார் ஸ்பின்னிற்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்றும், இவர்களில் திறமையின் அடிப்படையில் வரிசையும்படுத்தியுள்ளார் அஸ்வின்.

இதுகுறித்து பேசிய அஸ்வின், “தோனி - சஹா - தினேஷ் கார்த்திக் என்ற ஆர்டரில் வரிசைப்படுத்தலாம். தினேஷ் கார்த்திக்குடன் தமிழ்நாடு அணிக்காக நிறைய ஆடியிருக்கிறேன். ஆனால், ஒருவரை மட்டும் தேர்வு செய்ய  வேண்டுமென்றால்... மிக மிகக்கடினமான விக்கெட்டுகளை எளிமையாக வீழ்த்தி காட்டியவர் தோனி. தோனி விக்கெட் கீப்பிங்கில் அரிதினும் அரிதாகவே வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறார்” என்றார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement