
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி இருந்த இந்திய அணி, டி20 தொடரை இழந்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் முகேஷ் குமார் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நகர்ந்து கொள்ள அணி பரிசோதிக்கப்பட்டது. இந்தத் தொடரில் முகேஷ் குமார் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதற்கு அடுத்து நடந்த கடைசி தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் மூவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். முதல் இரண்டு போட்டிகளை தோற்று அடுத்து இரண்டு போட்டிகளை வென்று தொடருக்குள் திரும்பி வந்த இந்திய அணி இறுதி மற்றும் ஐந்தாவது போட்டியில் தோற்று தொடரை இழந்தது.
கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஒரு தொடரை இழந்திருந்தது. அதற்குப் பிறகு தற்பொழுது 2023 ஆம் ஆண்டு 17 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்திருக்கிறது. இந்த தோல்வி தற்பொழுது இந்திய ரசிகர்களிடையே விமர்சனத்தை உருவாக்கி வருகிறது.