
Rajasthan Royals Bring Back Steffan Jones As High Performance Fast Bowling Coach (Image Source: Google)
இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீஃபன் ஜோன்ஸ். இவர் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சோமர்செட், நார்த்தாம்டன்ஷையர், டெர்பிஷையர் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இந்நிலையில் அவரது பதிவிக்காலம் இந்தாண்டுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் ஸ்டீஃபன் ஜோன்ஸை மீண்டும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.