Advertisement

ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்கிற சூழலில் மும்பை அணி இந்த ஆட்டத்தில் இருந்தாவது எழுச்சி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement
Rajasthan Royals vs Mumbai Indians, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable
Rajasthan Royals vs Mumbai Indians, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 30, 2022 • 02:43 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஓய். பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 44-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன்  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 30, 2022 • 02:43 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - டிஒய் பாட்டீல் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தில் கம்பீரமாக உள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் வென்று கெத்தாக வெற்றிநடை போட்டு வருகிறது. ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், கேப்டன் சாம்சன் பேட்டிங்கிலும், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சிலும் அசத்துவதால் இன்றைய ஆட்டத்திலும் அவர்களின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

மும்பை அணியை பொறுத்தவரையில் இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் முதல் 8 ஆட்டங்களில் தோல்வியடைந்ததில்லை. இருப்பினும், எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றிகளை பெற்று, அடுத்த சீசனுக்காக வலுவான அணியை தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்கிற சூழலில் மும்பை அணி இந்த ஆட்டத்தில் இருந்தாவது எழுச்சி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • மும்பை வெற்றி - 13
  • ராஜஸ்தான் வெற்றி - 11
  • முடிவில்லை - 1

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கே), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மியர், டேரில் மிட்செல் / நவ்தீப் சைனி, ரியான் பராக், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட் / ஜிம்மி நீஷம், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா, தேவ்தத் படிக்கல்
  • ஆல்-ரவுண்டர் - ரவிச்சந்திரன் அஸ்வின்
  • பந்துவீச்சாளர்கள் - ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement