
Rajasthan Royals vs Royal Challengers Bangalore - Probable XI (Image Source: Google)
அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறு 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இரு அணியும் இதுவரை பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யாததால் நிச்சயம், இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி இரு அணிகளிலும் அதிரடியான பேட்டிங் வரிசையும், சிறப்பான பந்துவீச்சு யூனிட்டையும் கொண்டுள்ளதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.