
2018 ஜூலை முதல் நவம்பர் வரை இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் பணியாற்றினார். 2018 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. எனினும் அப் போட்டியின்போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும், மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது. புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது.
கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட். மூத்த வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட மூவர் தேர்வுக்குழு, 2018 டிசம்பரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமனைத் தேர்வு செய்தது.