பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை- பிசிசிஐ!
ரஞ்சி கோப்பை தொடர் பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.
ரஞ்சி வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பைப் போட்டி கரோனா சூழல் காரணமாக நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. இந்த வருடப் போட்டி வழக்கமான அட்டவணைப்படி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் கரோனா பரவல் இந்தியாவில் அதிகமானதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ரஞ்சி கோப்பைப் போட்டியின் முதல் பகுதியான லீக் ஆட்டங்கள், வரும் 10ஆம் தேதி முதல் மாா்ச் 15ஆம் தேதி வரை நடைபெறும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. நாக்அவுட் ஆட்டங்கள் மே 30 முதல் ஜூன் 26 வரை நடைபெறவுள்ளன.
Trending
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டி 62 நாள்களுக்கு 64 ஆட்டங்களாக நடைபெறும். 8 எலைட் மற்றும் 1 பிளேட் என 38 அணிகளும் 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
எலைட் பிரிவில் தலா 4 அணிகளும் பிளேட் பிரிவில் 6 அணிகளும் உள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 3 ஆட்டங்கள் விளையாடும். எலைட் பிரிவு ஆட்டங்கள் - சென்னை உள்பட 9 நகரங்களில் நடைபெறவுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now