
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த நிலையில் டூர்ஹாமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென்ஸ்டோக்ஸ் இந்த போட்டியின் இருந்து ஒரு நாள் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.இதனால் அவருக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் அதிக அளவில் ரசிகர்கள் கூடினர்.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் குயின் டிக்காக் 19 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜென்மான் மாலன் மற்றும் வெண்டர் டுசன் ஆகியோர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் மாலன் 52 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் நடு வரிசையில் களமிறங்கிய ஐடன் மார்க்கரம் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார்.