
ஐபிஎல் 15 ஆவது சீசனின் இன்றைய நாளில் இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டி இன்று பகல் 3.30 மணிக்கு நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியை மட்டுமே விளையாடியுள்ளது. மும்பை அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மறுபக்கம் தனது முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதுவரை இந்த சீசனில் நடந்த போட்டிகளிலேயே, ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டும் தான் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு காரணம் அந்த அணியில் ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மையர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால்தான்.