Advertisement

ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு பதிலாக அவரை கேப்டனாக நியமித்திருக்கலாம் - ரவி சாஸ்திரி!

ஜடேஜா போன்ற வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோனிக்குப் பிறகு ஃபாஃப் டு பிளசிஸை தக்கவைத்து சிஎஸ்கே கேப்டனாக அறிவித்து இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Advertisement
Ravi Shastri Says This Player Should Have Become CSK Captain After MS Dhoni
Ravi Shastri Says This Player Should Have Become CSK Captain After MS Dhoni (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 11, 2022 • 12:11 PM

எம்எஸ் தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2022 சீசனில் ஒரு மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 11, 2022 • 12:11 PM

இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. இந்த சீசனில் ஒரு புள்ளி கூட இல்லாமல், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து திணறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னையை தோற்கடித்து வெற்றிப்பாதைக்கு திரும்பி விட்டது.

Trending

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தென்னாப்பிரிக்கா நட்சத்திரம் ஃபாஃப் டு பிளெசிஸை விடுவித்ததில் சிஎஸ்கே தவறு செய்ததாகக் கூறினார். 

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “ஜடேஜா போன்ற ஒரு வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு மேட்ச் வின்னர் மற்றும் நிறைய போட்டிகளில் விளையாடியவர். ஆனால் சென்னை அணி ஃபாஃப் டு பிளெசிஸை விட்டு இருக்கக்கூடாது. 

தோனி கேப்டனாக விரும்பவில்லை என்றால். ஃபாஃப் கேப்டனாகவும், ஜடேஜா ஒரு வீரராகவும் விளையாடியிருக்க வேண்டும். அப்போதுதான் ஜடேஜாவால் சுதந்திரமாக விளையாட முடியும், கேப்டன்சியின் அழுத்தம் இல்லாமல் இருந்திருப்பார்” என்று கூறினார் . 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement