
Ravichandran Ashwin Reveals He Was In Contention To Play Lord's Test (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவில்லை. அந்த போட்டியில் அஸ்வின் விளையாடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய அஸ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.
எனவே 2ஆவது டெஸ்ட்டில் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2ஆவது டெஸ்ட்டிலும் அஸ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடியது.