
Ravindra Jadeja deletes sensational four-word reply about his CSK future (Image Source: Google)
கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் இன்று வரை சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது ஜடேஜா சென்னை அணியை விட்டு வெளியேறுகிறாரா என்பது தான்.
இந்தாண்டு ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் சென்னை அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்றது. இதனையடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி தோனி மீண்டும் கேப்டனானார். இது முழுக்க முழுக்க ஜடேஜாவின் முடிவு என அணி நிர்வாகம் கூறியபோதும், ஜடேஜாவுக்கு அதிருப்தி இருந்ததாக தகவல் வெளியானது.
அதற்கேற்றார் போல பாதியிலேயே அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.