
Ravindra Jadeja Displays India's Retro Jumper For WTC Final (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான ஜெர்சியை அணிந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இங்கிலாந்தின் சுவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி வீரர்கள் கரோனா வழிமுறையின் கீழ் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதியில் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 24 பேர் கொண்ட இந்திய அணி ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்று அங்கு 10 நாள்கள் தனிமைப்படுத்தபடவுள்ளனர்.