
Ravindra Jadeja Overtakes Holder To Become No. 1 All Rounder (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 28 புள்ளிகளை இழந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.