Advertisement

ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு முன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 28, 2024 • 01:40 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 28, 2024 • 01:40 PM

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரில் நடைபெற்ற இப்போட்டியை காண வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் வரவில்லை . இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய வீரர்களும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா தோனியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

Trending

அதுமட்டுமின்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தில் எம்எஸ் தோனியின் வீட்டின் முன்பு நிற்பது போன்றும், “அவரது பிதிவில், 'ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆனால் அதன்பின் அவர் தோனியைச் சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement