
தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் நாடு முழுவதும் படு மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அதில் வரும் பஞ்ச் வசனங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.
ரசிகர்களால் கவரப்பட்ட இந்த திரைப்படம், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜா "புஷ்பா.. புஷ்பராஜ்" என்று தொடங்கும் பஞ்ச் டயலாக்கிற்கு நடித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இது நம்ம ஜடேஜாவா என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த படத்தின் மீதான மோகத்தால் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். அல்லு அர்ஜுனின் தோற்றத்தை போன்றே ஹேர்ஸ்டைல், தாடி, உடை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படமும் இணையத்தை தெரிக்கவிட்டு வருகிறது. மேலும் அதில், "புஷ்பானா ஃப்ளவர்னு நினச்சியா.. ஃபையர் என" வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.