
Ravindra Jadeja starts training in Southampton ahead of the WTC final (Image Source: Google)
வரும் ஜூன் 18ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கு விராட் கோலி தலைமையிலான 24 பேர் அடங்கிய இந்திய அணி ஜூன் 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மைதானத்தில் உள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று சவுத்தாம்டன் மைதானத்தில் தங்களது பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளனர்.