
RCB captain Faf Du Plessis in the post-match presentation! (Image Source: Google)
15 ஆவது சீசனின் ஐபிஎல் திருவிழாவில் இரண்டாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஓபனராக களம் இறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. 57 பந்துகளை விளையாடிய அவர், 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 88 ரன்களை குவித்தார்.
விராட் கோலியும் அவருடன் அதிரடி காட்டி, 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கும் பந்தை அனைத்து பக்கமும் விளாசினார். இதனால் பெங்களூர் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.