
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலக, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படவில்லை. ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே அணி. கேப்டன்சி அழுத்தத்தால் ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பினார். சிஎஸ்கே அணியும் தொடர் தோல்விகளை தழுவியது. அதன்விளைவாக கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியதையடுத்து தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
தோனி கேப்டன்சியை ஏற்ற அடுத்த போட்டியிலேயே சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக சிஎஸ்கே அணி இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது. ஆர்சிபியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், சிஎஸ்கே அணியில் தோனியின் கேப்டன்சியில் நீண்டகாலம் ஆடிய அனுபவமிக்கவர் என்பதால், சிஎஸ்கே அணியை பற்றியும், தோனியின் கேப்டன்சி பற்றியும் நன்கு அறிந்தவர். எனவே போட்டி கடுமையாக இருக்கும். அதேபோல டு பிளெசிஸின் நிறை, குறைகளை அறிந்த அணி சிஎஸ்கே.