
RCB v KKR, Probable Playing XI - The Eliminator (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, 2ஆவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்; தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும்.