Advertisement

ஐபிஎல் 2021: ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!

ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 03, 2021 • 11:44 AM
RCB v PBKS: 48th IPL Match Probable Playing XI
RCB v PBKS: 48th IPL Match Probable Playing XI (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான போட்டியில் ஆர்சிபியும், பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.  இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 4ஆம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைக்கும்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் தான் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவானதாகவும், நல்ல பேலன்ஸானதாகவும் செட் ஆகியுள்ளது.  எனவே அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

Trending


அதேபோல் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக கைல் ஜேமிசன் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

உத்தேச அணி;

பஞ்சாப் கிங்ஸ்:  கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், ஷருக்கான், தீபக் ஹூடா, ஃபபியன் ஆலன், நேதன் எல்லிஸ், ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆர்சிபி : விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர், கிளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஜார்ஜ் கார்டன், கைல் ஜாமிசன், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement