ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டி (Image Source: Cricketnmore)
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பையும் கூட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ முடிந்துள்ள நிலையிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி இனிவரும் ஆனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கும் என்ற நிலையிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்
பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இங்கு எளிதாக 180 ரன்களைகூட எட்டலாம் என்பது அணிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 04
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 02
- குஜராத் டைட்டன்ஸ் - 02
- விக்கெட் கீப்பர்: விருத்திமான் சாஹா
- பேட்டர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), டேவிட் மில்லர், ராஜத் பட்டிதார், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ்
- ஆல்-ரவுண்டர்கள்: வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல்
- பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான்
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News