Advertisement

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 01, 2024 • 15:37 PM
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி ல
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி ல (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வி, ஒரு வெற்றியை மட்டுமே சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் சீசனில் சொந்த மைதானத்தில் தோல்வியைச் சந்தித்த முதல் அணி எனும் மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வகையில் அந்த அணி விளையாடவுள்ளந்து. 

அந்த அணியின் பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அவருடன் இணைந்து விளையாடிய கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல், ராஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது சிராஜ், அல்ஸாரி ஜோசப் போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

மறுபக்கம் கேஎல் ராகுல் தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணி, நிக்கோலஸ் பூரன் தலைமையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் அந்த அணி தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டி காக், கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற வீரர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். 

அதேசமயம் அணியின் பந்துவீச்சில் மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருனால் பாண்டியா ஆகியோருடன் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது முதல் போட்டியிலேயே வேகத்தால் எதிரணி பேட்டர்களை நிலைகுழைய வைத்துள்ளது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. அவருக்கு துணையாக ஷமார் ஜோசப்பும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தால் நிச்சயம் அந்த அணி வெற்றியை ஈட்டும் என்பதில் சந்தேகமில்லை. 

பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இங்கு எளிதாக 180 ரன்களைகூட எட்டலாம் என்பது அணிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிகல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், குயின்டன் டி காக், கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன் - விராட் கோலி (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், க்ருனால் பாண்டியா, கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ்.

RCB vs LSG IPL 2024 Dream11 Prediction, Today Match RCB vs LSG, RCB vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, MI vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Royal Challengers Bangalore vs Lucknow Super Giants

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement