Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 24, 2024 • 16:28 PM
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப் (Image Source: Cricketnmore)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பங்கெளூரு அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ஆர்சிபி அணி தங்கள் முதல் போட்டியில் தோல்வியையும், பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றியையும் பெற்று தொடரை தொடங்கியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - எம் சின்னாசமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அணியின் பேட்டிங்கில் ஃபாஃப் டூ பிளெசிஸ் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தாலும், மற்ற வீரர்களான விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், ராஜத் பட்டிதார்ர் போன்ற வீரர்கள் சோபிக்க தவறியது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

அதேசமயம் அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் ஃபினிஷிங் சிறப்பாக இருப்பதால் அந்த அணியின் பேட்டிங்கில் மற்றவர்கள் சோபிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் யாஷ் தயாள், மயங்க் தாகர், கரண் சர்மா போன்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசினாலும் முகமது சிராஜ், அல்ஸாரி ஜோசப், கேமரூன் க்ரீன் போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். 

அதிலும் குறிப்பாக அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் அதிகளவு ரன்களைக் கொடுத்துள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக லோக்கி ஃபர்குசன் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டி பெங்களூரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது, தங்கள் ரசிகர்கள் முன் முதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுபக்கம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் முதல் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பேர்ஸ்டோவ் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை இழந்தாலும் அவர்களது ஃபார்ம் சிறப்பாக உள்ளது. 

அதேசமயம் அணியின் பந்துவீச்சு தான் சற்று கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஏனெனில் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் ரன்களை வாரி வழங்கியுது அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதுதவிர்த்து காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஹர்ப்ரீத் பிரார் போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது வெற்றி பாதையை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இங்கு எளிதாக 180 ரன்களைகூட எட்டலாம் என்பது அணிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்  - 31
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14
  • பஞ்சாப் கிங்ஸ் - 17

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், கரன் ஷர்மா, அல்ஸாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சாஹர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - அனுஜ் ராவத்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஃபாஃப் டு பிளெசிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கேமரூன் கிரீன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

RCB vs PBKS IPL 2024 Dream11 Prediction, Today Match RCB vs PBKS, RCB vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, RCB vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Royal Challengers Bangalore vs Punjab Kings

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement