
RCB vs RR: R Ashwin becomes 2nd off-spinner to take 150 wickets in Indian Premier League (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. ரியான்பராக் 31 பந்தில் 56 ரன் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். முகமது சிராஜ், ஹாசல்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி 29 ரன்னில் தோற்றது. கேப்டன் டுபெலிசிஸ் அதிகபட்சமாக 23 ரன் எடுத்தார். குல்தீப்சென் 4 விக்கெட்டும், தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.