
Really honoured to be retained by RCB, says Siraj (Image Source: Google)
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
இதில் பெங்களூருவை மையமாகக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோரைத் தக்கவைப்பதாக அறிவித்தது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஊதா தொப்பியை தன்வசப்படுத்திய ஹர்ஷல் படேல் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகமது சிராஜை ஆர்சிபி தக்கவைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.