Advertisement

2011 உலக கோப்பை காலிறுதியில் தோற்ற போது எனக்கு கொலை மிரட்டல் வந்தது - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த டூ பிளெஸிஸ்!

011ஆம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொற்றதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 18, 2021 • 21:32 PM
Received death threats after 2011 WC quarter-final: du Plessis
Received death threats after 2011 WC quarter-final: du Plessis (Image Source: Google)
Advertisement

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

மேலும் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளெஸிஸ், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொற்றதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அதிர்ச்சியூட்டும் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய டூ பிளெஸிஸ்,“நியூசிலாந்து அணிக்கெதிரான காலிறுதி போட்டிக்கு பிறகு எங்களுக்கு கொலை மிரட்டல் வந்தது. ஆனால் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் சிறிது காலம் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தோம். மேலும் சில நாள்களுக்கு வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தோம். அதன் பிறகுதான் நிலைமை சீரானது.

மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது போல மற்ற வீரர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியாது” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement