Advertisement

ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் - பிசிசிஐ அதிரடி!

ஐபிஎல் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கரோனா நிலையை கருத்தில் கொண்டு எங்கு போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
 Reports: BCCI planning to host entire IPL 2022 in Maharashtra
Reports: BCCI planning to host entire IPL 2022 in Maharashtra (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 10, 2022 • 04:10 PM

பிரபல டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது சீசன் வருகிற ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 10, 2022 • 04:10 PM

இந்தாண்டிற்கான தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

Trending

மேலும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்ற தகவலும் வெளியானது. 

இதற்கிடையே நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரை ஒரே இடத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 2ஆவது திட்டம் தயாரிக்கப்பட்டு ள்ளது.

போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கரோனா நிலையை கருத்தில் கொண்டு 2ஆவது திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து ஐபிஎல் போட்டிகளையும், மகாராஷ்டிர மாநிலத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், நவீ மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானம் ஆகிய 3 மைதானங்களில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement