
ஐபிஎல் தொடரின் அபார வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்களும் ஐபிஎல் தொடரின் அடிப்படையிலேயே டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் கர்நாடக மாநிலத்தில் நடத்தப்படும் மகாராஜா லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவை. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன .
தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . இந்த லீப் போட்டிகளில் ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. 33 போட்டிகளை கொண்ட இந்தத் தொடரானது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது அனைத்துப் போட்டிகளும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீரட் மார்வலஸ் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய காசி ருத்ராஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது . அந்த அணியின் கரன் ஷர்மா 58 ரன்களும், பிரியாங் பஞ்சால் 57 ரன்களும் எடுத்தனர் . இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மீரட் மார்வலஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது