ரிஷப் பந்திடம் பண மோசடி செய்த கிரிக்கெட் வீரர் கைது!
ரிஷப் பந்திடம் விலையுயர்ந்த வாட்ச், மொபைல் வாங்கித்தருவதாக கூறி ரூ.1.63 கோடி ஏமாற்றிய மோசடி கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மிரினான்க் சிங். இவர் விலையுயர்ந்த வாட்ச், மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரம் செய்வதாக கூறி ரிஷப் பந்தை அணுகியுள்ளார்.
ஏற்கனவே சில கிரிக்கெட் வீரர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச், அணிகலன்களை வாங்கி கொடுத்திருப்பதாக சில குறிப்புகளையும் காட்டியதால், ரிஷப் பந்த்தும் அவரை நம்பியிருக்கிறார்.
Trending
ரிஷப் பந்திடம் தள்ளுபடி விலையில் விலையுயர்ந்த வாட்ச் வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார். ரிஷப் பந்த் விற்க நினைத்த அவரது 2 விலையுயர்ந்த வாட்ச்களையும் மிரினான்க் சிங்கிடம் கொடுத்துள்ளார்.
ரூ.36.25 லட்சம் மதிப்புள்ள பிராங்க் முல்லர் வான்கார்ட் யாச்சிங் சீரிஸ் வாட்ச் மற்றும் ரூ.62.60 லட்சம் மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லே வாட்ச் ஆகிய 2 வாட்ச்களையும் அவரிடம் கொடுத்ததுடன், தனக்கு தேவையானவற்றை வாங்குவதற்காக ரூ.2 கோடி கொடுத்திருக்கிறார்.
ஆனால் சிங் எதையுமே வாங்கிக்கொடுக்காததால், கடைசியில் அந்த டீலை முடித்துக்கொண்டு ரூ.1.63 கோடியை ரிஷப் பந்திற்கு அவர் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த தொகைக்கு சிங் கொடுத்த காசோலை போலியானது என்பது தெரியவந்ததையடுத்து, ரிஷப் பந்தும் அவரது மேலாளரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து மிரினான்க் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் ஒரு தொழிலதிபரையும் ஏமாற்றியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
Win Big, Make Your Cricket Tales Now