ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு 12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. முதலில் பேட் பிடித்த டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. 150 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இத்தொடரில் லக்னோ அணி தொடர்ச்சியாக 3ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியது. டெல்லி அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் என்ற முறையில் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது இந்த சீசனின் முதல் குற்றமாகும், இதனால் கேப்டன் ரிஷப் பந்த் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார். ஆனால், அடுத்த போட்டியில் தவறு செய்தால் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now