90’ஸ் ஹீரோக்கள் ரீஎண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் இன்று முதல் ராய்பூரில் நடைபெறுகிறது.
சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு லெஜண்ட் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாகப் போட்டிகளை முழுமையாக நடத்தி முடிக்க இயலவில்லை.
இந்நிலையில், கரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து மார்ச் மாதம் முதல் மீண்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டிகளை ராய்பூரில் நடத்த திட்டமிடப்பட்டது.
Trending
அதன்படி இன்று நடைபெறும் சாலை பாதுக்காப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, வங்கதேச லெஜண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
மேலும் இதில் ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ‘லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் இந்திய லெஜண்ட்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார். மேலும் 90’ஸ் கிட்ஸ்களின் நாயகர்களான விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், மன்பிரீத் கோனி ஆகியோரும் மீண்டும் கிரிக்கெட் களத்தில் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடரவுள்ளனர்.
ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியில் பிராட் ஹேடின், பிரெட் லீ, மெக்காய் உள்ளீட்ட வீரர்களும், இலங்கை அணியில் கபுகேந்த்ரா, அத்தபட்டு, முத்தையா முரளிதர, தில்சன், உபுல் தரங்கா, சமிந்த வாஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றன.
மேலும் வெஸ்ட் இண்டீஸில் பிரைன் லாரா, சந்தர்பால், சமூல் பத்ரி ஆகியோரும், இங்கிலாந்தில் கெவின் பீட்டர்சன், ஜானதன் ட்ரோட், ஓவைஸ் ஷா ஆகியோரும் பங்கேற்கின்ற்னர். இதில் பிரெட் லீ தலைமையிலான ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணி பங்கேற்காததால், வங்கதேச லெஜண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.
எதுவாயினும் நீண்ட நாள்களுக்கு பிறகு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய லெஜண்ட்ஸ் அணி: வீரேந்தர சேவாக், சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), முகமது கைஃப், யுவராஜ் சிங், யூசுப் பதான், இர்ஃபான் பதான், மன்பிரீத் கோனி, நமன் ஓஜா, முனாஃப் பட்டேல், வினய் குமார், பிரக்யன் ஓஜா, பத்ரிநாத், நோயல் டேவிட்
Win Big, Make Your Cricket Tales Now