ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - எம்சிஏ மைதானம், புனே
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 9 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இதனால், இன்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி மட்டுமல்ல, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கேவுக்கு மிகவும் முக்கியமானதுதான்.
சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே இருவரும் கடந்த போட்டியில் பவர் பிளேவில் நிதானமாக விளையாடி, செட் ஆகிவிட்ட பிறகு மிடில் ஓவர்களில் தொடர்ந்து ரன் மழை பொழிய ஆரம்பித்தனர். இன்று ஆர்சிபிக்கு எதிராகவும் இதே திட்டத்தை கடைபிடிக்க வாய்ப்புள்ளது. இதனால், ஆர்சிபி எவ்வளவு ரன்கள் அடித்தாலும், நிச்சயம் சேஸ் செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. முதலில் களமிறங்கினால், பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்புள்ளது.
மற்றபடி பந்துவீச்சில் முகேஷ் சௌத்ரி, தீக்ஷனா, சமர்ஜித் சிங் ஆகியோர் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்.
அதேசமயம் ஆர்சிபி அணி இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த அணி கடைசி மூன்று போட்டிகளிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பேட்ஸ்மேன்கள்தான். டூ பிளெசிஸ் கடந்த 10 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
கோலி, ராஜத் படிதர் ஆகியோர் கடந்த போட்டியில் அரை சதம் அடித்திருந்தாலும், அதற்காக அவர்கள் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டதையும் மறந்துவிடக் கூடாது. பினிஷர்கள் தினேஷ் கார்த்திக், ஷாபஸ் அகமது இருவரும் கடந்த 4 போட்டிகளிலும் சேர்த்து 21, 42 என படுமோசமாக சொதப்பியிருக்கிறார்கள்.
இது அந்த அணிக்கு பின்னடைவான விஷயம்தான். மற்றபடி பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், ஹசரங்கா ஆகியோர் சிறந்த பௌலர்கள்தான்.
பிட்ச் ரிப்போர்ட்
இந்த பிட்சில் கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றிருப்பதால், முழு நம்பிக்கையுடன் அவர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆர்சிபி கடந்த மூன்று போட்டிகளிலும் தோற்றிருப்பதால், இன்று வெற்றிபெற்றாக வேண்டும் என்ற அழுத்தங்களுடன் விளையாட வாய்ப்புள்ளது. பெரிய ஸ்கோர் போட்டியாக இருக்கும் என்பதால், டாஸ் பெரிய பிரச்சினையாக ஏற்படுத்த வாய்ப்பில்லை.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 29
- சிஎஸ்கே வெற்றி - 19
- ஆர்சிபி வெற்றி - 9
- முடிவில்லை - 1
உத்தேச அணிகள்
சிஎஸ்கே: டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, மிட்செல் சாண்ட்னர் / மொயின் அலி, டுவைன் பிரிடோரியஸ், சமர்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி, மகீஷ் தீக்ஷனா.
ஆர்சிபி: விராட் கோலி, டூ பிளஸி, ராஜத் படிதர், கிளெம் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபஸ் அகமது, மஹிபால் லாம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஸ் ஹேசில்வுட்.
ஃபேண்டஸி லெவன்
- கீப்பர் - தினேஷ் கார்த்திக்
- பேட்ஸ்மேன்கள் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, டெவன் கான்வே, ராபின் உத்தப்பா
- ஆல்ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா
- பந்துவீச்சாளர்கள் - வனிந்து ஹசரங்க, முகேஷ் சவுத்ரி, ஜோஷ் ஹேசல்வுட்
Win Big, Make Your Cricket Tales Now