ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆர்சிபி ஐபிஎல் 2022 பிளே ஆஃபில் தகுதி பெறுவது மிகவும் எளிதானது, இன்று குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 16 புள்ளிகளுக்கு சென்று டெல்லி கேப்பிடல்ஸ் தன் கடைசி லீகில் தோற்க பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவே.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ஏற்கெனவே குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற நிலையில், ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - வான்கடே மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
குஜராத்தை வீழ்த்த டுப்ளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி போன்ற பெரிய படை தாறுமாறாக அடிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சாத்து வாங்கி 4 ஓவர் 64 ரன்கள் கொடுத்தார், இன்று அப்படியெல்லாம் வீசினால் குஜராத் 11வது வெற்றியை பெறும்.
பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு கனவு தகர்ந்து விடும். அதே சமயம் பெங்களூரு அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது.
அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னே றி விட்டது. இந்த ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் எந்தவித பதற்றத்துக்கும் வாய்ப்பு இல்லை.
பெங்களூருவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
உத்தேச லெவன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கே), ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட்/ ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், சாய் கிஷோர், அல்சாரி ஜோசப்/ லோக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி/ தர்ஷன் நல்கண்டே.
ஃபேண்டஸி டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், விருத்திமான் சாஹா
- பேட்டர்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ், ஷுப்மான் கில், ரஜத் படிதார்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - வனிந்து ஹசரங்கா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது ஷமி
Win Big, Make Your Cricket Tales Now