ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடக்கும் 60-வது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
பெங்களூர் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 4ஆம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் அந்த அணி இன்று களமிறங்குகிறது.
பேட்டிங்கில் டு பிளெசிஸ் (389 ரன்கள்), தினேஷ் கார்த்திக் (274 ரன்கள்) கைகொடுக்கின்றனர். ரன் குவிக்க திணறிவரும் விராட் கோலி இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா (21 விக்கெட்), ஹர்சல் படேல் (14 விக்கெட்) மிரட்டுகின்றனர்.
மறுபுறம் பஞ்சாப் அணி நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 8ஆம் இடத்தில் உள்ளது. பிளே–ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அந்த அணிக்கு அவசியம் ஆகும்.
அதுமட்டுமின்றி மற்ற சில அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை சார்ந்தே பஞ்சாப் அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பும் அமைந்துள்ளது. ஒருவேளை இன்று தோல்வியடைந்தால், பஞ்சாப் அணி பிளே–ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிடும்.பேட்டிங்கில் ஷிகர் தவான் (381 ரன்கள்), லியாம் லிவிங்ஸ்டோன் (315 ரன்கள்) ஃபார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சில் ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் தவிர்த்து வேறு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்த சீசனில் பெங்களூர் - பஞ்சாப் அணிகள் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த 3-வது லீக் போட்டியில் பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது. அப்போட்டியில் 206 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனவே பஞ்சாப் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேசமயம் அந்த தோல்விக்கு பழிதீர்க்க பெங்களூரும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி
ஆர்சிபி : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் , மஹிபால் லோம்ரோர், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, மயங்க் அகர்வால் (கேட்ச்), ஜிதேஷ் சர்மா (வி.கே.), லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா
ஃபேண்டஸி லெவன்
- கீப்பர் - ஜானி பேர்ஸ்டோ, தினேஷ் கார்த்திக்
- பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், ஷிகர் தவான், ரஜத் படிதார்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான்
- பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, வனிந்து ஹசரங்க, ஜோஷ் ஹேசல்வுட்.
Win Big, Make Your Cricket Tales Now