Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2025 • 11:56 AM
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2025 • 11:56 AM
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் அந்த அணி சிறப்பான ரன்ரேட்டில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் குறித்தி யோசிக்க முடியும் என்பதால, அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷியின் வருகை அணிக்கு பெரும் பலமாக உள்ள நிலையிலும், சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒருபக்கம் சிறப்பாக செயல்படும் நிலையில் மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்கு துணை நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், இன்றைய போட்டியில் அவர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, யுத்விர் சிங்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளைப் பூர்த்தி செய்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸிலும் நீடித்து வருகிறது. இதனால் இனி வரும் போட்டிகளிலும் அந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், ஹர்திக் பண்டியா, தீலக் வர்மா, நமன் தீர் என நட்சத்திர பட்டாளங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். மறுபக்கம் பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் அபாரமான ஃபார்மில் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று, தங்களின் ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • மும்பை இந்தியன்ஸ் - 15
  • ராஜஸ்தான் ராயல்ஸ்- 14
  • முடிவில்லை - 01 
Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்ட்யா, வில் ஜாக்ஸ், ரியான் பராக்
  • பந்து வீச்சாளர்கள்- டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement