இலங்கை அணியின் பயிற்சியாளராக மாறிய மலிங்கா!
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடருக்கான இலங்கை அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடருக்கான் இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முடிவிற்குப் பின் பேசிய மலிங்கா, ‘எங்களிடம் மிகவும் திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களிடம் எனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now