
Ruturaj Gaikwad 6th Player To Head To NCA After Getting Injured (Image Source: Google)
இந்தியா, இலங்கை இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தும் பயிற்சியின்போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில், மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்குப் பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடரிலிருந்து விலகியுள்ள ருதுராஜ் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு விரைகிறார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ள மயங்க் அகர்வால், தரம்சலாவிலுள்ள இந்திய அணியுடன் இணைந்துவிட்டார்.