Advertisement

இந்த வீரர் பல அதிசயங்களை நிகழ்த்துவார் - சேத்தன் சர்மா நம்பிக்கை!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார் என்று தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Ruturaj Gaikwad has been given opportunity at the right time, can do wonders for India: Chetan Sharm
Ruturaj Gaikwad has been given opportunity at the right time, can do wonders for India: Chetan Sharm (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 01, 2022 • 06:26 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 01, 2022 • 06:26 PM

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளாததால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

Trending

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக ஆடி 635 ரன்களை குவித்து, 14ஆவது சீசனில் அதிகபட்ச ரன் ஸ்கோரராக அந்த சீசனை முடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். அதன் பலனாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார் கெய்க்வாட். அண்மையில் நடந்த உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் 4 சதங்களுடன் அதிகபட்சமாக 603 ரன்களை குவித்து, தன்னை ஒதுக்கமுடியாத அளவிற்கான அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ருதுராஜ். அதன் பலனாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியில் எடுத்தது குறித்து பேசிய தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா, “சரியான நேரத்தில் ருதுராஜ் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். டி20 அணியில் ஏற்கனவே இடம்பிடித்துவிட்டார். இப்போது ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளார். அவர் கண்டிப்பாக இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார் என தேர்வாளர்களாகிய நாங்கள் நம்புகிறோம். 

நாங்கள் ருதுராஜை இந்திய அணியில் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிப்பதும், அளிக்காததும் அணி நிர்வாகத்தின் முடிவு. அணி காம்பினேஷனை கருத்தில்கொண்டு அணி நிர்வாகம் தான் ருதுராஜை ஆடவைப்பது குறித்து முடிவெடுக்கும். டி20 அணியில் இடம்பெற்று நன்றாக ஆடியதன் பலனாக ஒருநாள் அணியிலும் ருதுராஜ் இடம்பெற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement