
Ruturaj Gaikwad to lead Maharashtra in Syed Mushtaq Ali Trophy (Image Source: Google)
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. அதிலும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய வீரர்காக திகழ்தவர் ருதுராஜ் கெய்க்வாட்.
மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் அவர் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான மகாராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியுமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணை கேப்டனாக பொறுப்பேற்க இருந்த ராகுல் திரிபாதி காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் நௌஷத் ஷேக்குக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.