
நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் மக்களுக்கு மிகவும் பரீட்சையமான வீரர் என்றால் அது ரியான் டென் டோஷேட். 2006ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடிவரும் இவர் இதுவரை 33 ஒருநாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடி 2000 -க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 41வயதாகும் டென் டோஷேட், நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கூடவே ஒரு ஆதிர்ச்சி செய்தியும் காத்திருந்தது.
அதுல் இந்தாண்டு இறுதியில் ரியான் டென் டோஷேட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தான். இதனை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்து. இதன் காரணமாகவே டோஷேட், டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.