
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்சூரியனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் கருப்பு பேட்ஜ் கையில் கட்டி விளையாடினர்
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய தேஸ்மாண்ட் டூடு, இன்று கேப் டவுனில் காலமானார். அவருக்கு வயது 90, இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே தென் ஆப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். டூடு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபால் பரிசு வென்றவர் .
லண்டனில் எம்.ஏ. படித்த தேஸ்மாண்ட் டூடு, தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பிய போது, அங்கு கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை கண்டித்து போராடினார். 1986ஆம் ஆண்டு கேப்டவுனின் ஆர்ச்பிஷப்பாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவை ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் டூடு எடுத்தார்.