Advertisement

கரோனா அச்சுறுத்தல்: தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து தொடர் ரத்து!

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 28, 2021 • 09:30 AM
SA v NED: ODIs Between The Two Countries Postponed Amid Rising Covid Cases
SA v NED: ODIs Between The Two Countries Postponed Amid Rising Covid Cases (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட நெதர்லாந்து அணி சென்றுள்ளது. 

இதில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழைக் காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. 

Trending


இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமைக்ரான் எனும் புதியவகை கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 

இதையடுத்து வீரர்களின் பாதுக்காப்பு காரணங்களினால் இத்தொடரை ரத்து செய்வதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. 

மீண்டும் கரோனா பரவல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்படுவது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement