
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்புகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செப்டம்பர் 7ஆம் தேதி ஆரம்பித்தது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் தொடங்கவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
- இடம் - கிங்ஸ்மெட், டர்பன்
- நேரம் - இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)