
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி , தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ந்து அசத்தினார். அதன்பின் 64 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.