Advertisement

SA vs AUS, 3rd ODI: மார்க்ரம் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 டார்கெட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2023 • 20:19 PM
SA vs AUS, 3rd ODI: மார்க்ரம் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 டார்கெட்!
SA vs AUS, 3rd ODI: மார்க்ரம் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 டார்கெட்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Trending


அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 82 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டெம்பா பவுமா 57 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதில் அரைசதத்தை நெருங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தை நிரைவு செய்தார். 

அவருடன் இணைந்த மார்கோ ஜான்செனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்திருந்த மார்கோ ஜான்சென், சீன் அபேட்டின் அபாரமான கேட்சினால் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 74 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 104 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement