
SA vs BAN, 1st ODI: Bangladesh Finishes off 314/7 on their 50 overs (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் இன்று செஞ்சூரியனில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தமிம் இக்பால் 41 ரன்களில் ஆட்டமிழக்க, லிட்டன் தாஸ் அரைசதம் அடித்த கையோடு வெளியேறினார்.