
SA vs IND: All Indian wickets out by catch first time in test cricket (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
இதனால், தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற, இரு அணிகளும் கடுமையாக போராடி வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில், முதலில் ஆடிய இந்திய அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.