Advertisement
Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

Advertisement
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 14, 2024 • 06:08 PM

South Africa vs India 4th T20I Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 14, 2024 • 06:08 PM

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்று. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை சமன்செய்யும். இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Trending

SA vs IND 4th T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம் - நவம்பர் 15, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs IND 4th T20I Pitch Report

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 26 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் தலா 13 முறை வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளனர். மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 171 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 260 ரன்களாக உள்ளது. இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம்போல் விளையாட முடியும் என்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SA vs IND 4th T20I: Where to Watch?

தென் ஆப்பிரிக்கா - இந்தியா டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

SA vs IND T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • தென் ஆப்பிரிக்கா - 12
  • இந்தியா - 17
  • முடிவில்லை - 01

South Africa vs India 4th T20I Probable Playing XI

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், லூத்தோ சிபம்லா

இந்தியா உத்தேச லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், ராமன்தீப் சிங், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி

SA vs IND 4th T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர் - அக்ஸர் படேல்(கேப்டன்), ஹர்திக் பாண்டியா,  மார்கோ ஜான்சன் (துணைக்கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்திஅர்ஷ்தீப் சிங், ஜெரால்ட் கோட்ஸி.

SA vs IND 4th T20I Dream11 Prediction, SA vs IND Dream11 Prediction, Today Match SA vs IND, SA vs IND T20I Series, SA vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs India

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement